Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பக்தர்கள் இன்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா நடக்கும் என அறிவிப்பு

பக்தர்கள் இன்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா நடக்கும் என அறிவிப்பு

By: Nagaraj Wed, 19 Aug 2020 7:04:20 PM

பக்தர்கள் இன்றி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா நடக்கும் என அறிவிப்பு

பக்தர் இன்றி பேராலய ஆண்டு பெருவிழா... கொரோனா அச்சம் காரணமாக வருகின்ற 29ம் தேதி தொடங்கும், வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் பேராலய அதிபர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புனித வேளாங்கண்ணி பேராலய அதிபர், மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் திருவிழாவை வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும், வரும் 29ம் தேதி திருக்கொடி பவனியை தொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றுவார் என்றும் தெரிவித்தார்.

velankanni,festival,devotees,avoid,worship ,
வேளாங்கண்ணி, திருவிழா, பக்தர்கள், தவிர்க்க வேண்டும், வழிபாட்டு

மேலும் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும் என்றும் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் வழிபாட்டு சடங்குகள் வழக்கம்போல நடைபெறும் எனவும் கூறினார்.

பாத யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டுள்ள பக்தர்கள் அரசின் நடைமுறையை பின்பற்றி ஆலயத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என பக்தர்களுக்கு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags :
|