Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவிப்பு

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவிப்பு

By: Karunakaran Fri, 18 Dec 2020 4:50:11 PM

ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். இந்நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி வந்தார். எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அது தள்ளுபடி ஆனது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் என்று அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த அதிபராக ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்படும்.

public,inauguration,joe biden,america ,பொதுமக்கள், பதவியேற்பு, ஜோ பிடன், அமெரிக்கா

பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இந்த விழா கோலாகலமாக நடைபெறும். இந்த முறை புதிய அதிபர் ஜோபைடனின் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு மிக குறைந்த எண்ணிக்கையில் எம்.பி.க்கள் அழைக்கப்படுகிறார்கள். அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். எனவே பதவி ஏற்பை காண்பதற்காக மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
|