Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு; சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு; சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

By: Monisha Fri, 13 Nov 2020 10:02:31 AM

தீபாவளியை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பு; சிறப்பு ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

பொது மக்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சார்பில் பண்டிகை காலத்தில் கூடுதலாக சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல, அதிகளவில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளதால், காத்திருப்போர் பட்டியலும் நீண்டு உள்ளது.

இந்தநிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்காக, தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில் சேவைகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-செங்கோட்டை (வண்டி எண்: 06181) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட 4 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

diwali,tickets,booking,special train,extra boxes ,தீபாவளி,டிக்கெட்,முன்பதிவு,சிறப்பு ரெயில்,கூடுதல் பெட்டிகள்

மேலும், எழும்பூர்-கொல்லம் (06063) சிறப்பு ரெயிலில் கூடுதலாக, படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில்(06063) சிறப்பு ரெயிலில், படுக்கை வசதி கொண்ட 6 பெட்டிகளும், எழும்பூர்-கன்னியாகுமரி-எழும்பூர்(02633/02634) சிறப்பு ரெயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டியும் ஒரு இணைக்கப்பட்டுள்ளது.

எழும்பூர்- தூத்துக்குடி-எழும்பூர் (02693/02694) சிறப்பு ரெயில், எழும்பூர்-நெல்லை(02631) சிறப்பு ரெயில், எழும்பூர்-செங்கோட்டை(02661) சிறப்பு ரெயில் மற்றும் தஞ்சாவூர்-எழும்பூர் (06866) சிறப்பு ரெயில்களில் தலா பெட்டியும், எழும்பூர்-காரைக்குடி(02605) சிறப்பு ரெயிலில் ஒரு பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|