Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

By: Monisha Thu, 27 Aug 2020 09:39:57 AM

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல பாரம்பரியமான ஓணம் பண்டிகை கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி ஓணம் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதையொட்டி கோவை மாவட்டத்தில் கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும் என அறிவித்துள்ளார்.

onam festival,coimbatore,local holiday,collector rasamani ,ஓணம் பண்டிகை,கோவை,உள்ளூர் விடுமுறை,கலெக்டர் ராசாமணி

விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 30-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :