Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூர் ஆர்.ஆர்.நகரில் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வருகை

பெங்களூர் ஆர்.ஆர்.நகரில் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வருகை

By: Nagaraj Sat, 24 Oct 2020 8:02:35 PM

பெங்களூர் ஆர்.ஆர்.நகரில் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வருகை

பாதுகாப்புக்கு துணை ராணுவம்... காங்கிரஸ் - பா.ஜ., தொண்டர்கள் மோதலையடுத்து, ஆர்.ஆர்.நகரில் பாதுகாப்புக்காக துணை ராணுவம் வந்துள்ளது.

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சட்டசபை தொகுதிக்கு, நவ., 3ல் இடைத்தேர்தல் நடக்கிறது. பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., ஆகிய மூன்று கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

மூன்று நாட்களுக்கு முன், லட்சுமிதேவி நகரில் காங்கிரஸ் தொண்டர்கள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறி, பா.ஜ.,வினர் தாக்கினர். இதனால் இரு தரப்பினரும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், நந்தினி லே - அவுட் காவல் நிலையம் முன், இரு தரப்பினரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

auxiliary army,law,order,vulnerability,defense,r.r. nagar ,துணை ராணுவம், சட்டம், ஒழுங்கு, பாதிப்பு, பாதுகாப்பு, ஆர்.ஆர்.நகர்

பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷ், காவல் நிலையம் வந்து போலீஸ் அதிகாரிகளை மிரட்டி சென்றார். ஆர்.ஆர்.நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இரு தரப்புக்கிடையே, மீண்டும் மோதல் ஏற்பட்டு கொலைகள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால், பாதுகாப்புக்காக துணை ராணுவம் நியமிக்கும்படி, பா.ஜ., வேட்பாளர் முனிரத்னா, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார்.

இவரது கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து, துணை ராணுவம் பெங்களூரு வந்துள்ளது. அவர்கள், ஆர்.ஆர்.நகரின் முக்கிய பகுதிகளில் ஊர்வலம் மேற்கொண்டு பாதுகாப்பு மேற்கொள்வர். இது குறித்து, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறியதாவது:

துணை ராணுவம், வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்.ஆர்.நகரில் சட்டம் - ஒழுங்கு பாதிப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறது. தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும். கொலை செய்யும் மனோபாவம் உள்ளவர்களே, அது போன்று கூறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|