Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சாம்னா காங்கிரசை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்ப்பதாக பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு

சாம்னா காங்கிரசை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்ப்பதாக பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு

By: Karunakaran Wed, 17 June 2020 1:40:07 PM

சாம்னா காங்கிரசை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்ப்பதாக பாலசாகேப் தோரட் குற்றச்சாட்டு

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் என மூன்று கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணி ஆட்சியில் காங்கிரசுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், மந்திரி அசோக் சவான் ஆகியோர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளனர்.

முக்கிய பிரச்சினைகளில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் மட்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்துவதாக குற்றம்ச்சாட்டியுள்ளனர். தற்போது, காங்கிரஸ் குறித்து சிவசேனாவின் சாம்னா தலையங்கத்தில், இடம் மாறக்கூடிய பலர் அந்த கட்சியில் உள்ளதாகவும். இதனால் சலசலப்பு இருப்பதாகவும், காங்கிரஸ் மந்திரிகள் அசோக் சவான், பாலசாகேப் தோரட்டுக்கு ஆட்சியில் அதிக அனுபவம் உள்ளது. ஆனால் நிர்வாகத்தில் சரத்பவாருக்கு நீண்ட அனுபவம் உள்ளதை அவர்கள் நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

balasakeb torat,sivasena,samna,congress ,சாம்னா,பாலசாகேப் தோரட்,காங்கிரஸ் ,சிவசேனா

இதுகுறித்து காங்கிரஸ் மாநில தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் கூறுகையில், முதல்-மந்திரி தான் கூட்டணி அரசின் தலைவர். சாம்னா மற்றொரு தலையங்கத்தை எழுத வேண்டும். முழுமை இல்லாத தகவலால் எங்களை பற்றி தவறான கருத்தை கொண்டு சேர்க்கிறது. நாங்கள் மகாவிகாஸ் கூட்டணியுடன் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சாம்னாவில் கவர்னர் ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட உள்ள 12 மேல்- சபை உறுப்பினர்கள், கட்சிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தை வைத்து முடிவு செய்யவேண்டும் என கூறப்பட்டுள்ளது குறித்து கூறுகையில், மந்திரிகளின் எண்ணிக்கையை தான் மொத்த எம்.எல்.ஏ.க்களை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Tags :
|