Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரிட்டனில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிப்பு

பிரிட்டனில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிப்பு

By: Karunakaran Sat, 19 Sept 2020 8:01:41 PM

பிரிட்டனில் பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிப்பு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.23 கோடி பேர் குணமடைந்துள்ளனர். 9.5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தொடர்ந்து மருத்துவத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். தடுப்பூசி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர். கொரோனா பாதிப்பில் 14வது இடத்தில் உள்ள பிரிட்டனில் 3.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ban,six people,uk,corona virus ,தடை, ஆறு பேர், இங்கிலாந்து, கொரோனா வைரஸ்

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாததாக உள்ளது. கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சமூக விலகல் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. புதிய மூன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், பொதுவெளியில் ஆறு பேருக்கு மேல் கூடத் தடை விதிக்கப்பட்டது. அதன்பின், மேலும் பொது நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

Tags :
|
|