Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புரெவி புயல் காரணமாக 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ளுக்கு தடை

புரெவி புயல் காரணமாக 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ளுக்கு தடை

By: Monisha Wed, 02 Dec 2020 2:05:47 PM

புரெவி புயல் காரணமாக 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க ளுக்கு தடை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று 4-வது நாளாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 300 நாட்டுப்படகுகள், 423 விசைப்படகுகளை சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி தருவைகுளம் பகுதியில் உள்ள மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகிறார்கள்.

கடந்த நில நாட்களுக்கு முன்பு 72 படகுகளில் ஆழ்கடலில் இருந்தன. அவர்களுக்கும் புயல் குறித்து எச்சரிக்கைவிடுக்கப்பட்டு உடனடியாக கரை திரும்ப உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து 64 படகுகள் நேற்று கரை திரும்பின. மேலும் 8 படகுகளை சேர்ந்த சுமார் 100 மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.

burevi storm,tamiraparani river,floods,fishermen,storm warning cage ,புரெவி புயல்,தாமிரபரணி ஆறு,வெள்ளம்,மீனவர்கள்,புயல் எச்சரிக்கை கூண்டு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் உருவாகி இருப்பதை குறிக்கவும், அது வலது புறமாக கடக்கும் என்பது குறித்து எச்சரிக்கைவிடுக்கும் வகையில் துறைமுகத்தில் இன்று காலை 6-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

புரெவி புயல் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்புள்ளதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் வரை ஆற்றங்கரை பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் காரணமாக இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை 3 நாட்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags :
|