Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா

By: Nagaraj Tue, 13 Oct 2020 1:58:19 PM

பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதா

வங்க தேசத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்க தேசத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வந்தது. பெண் ஒருவா், கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. 'பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள்; அவா்களுக்கு கருணை காட்டாதீா்கள்' என்ற கோஷங்களை போராட்டக்காரா்கள் முன் வைத்தனா்.

bill,consent,bangladesh,sexual abuse,death penalty ,மசோதா, ஒப்புதல், வங்கதேசம், பாலியன் வன்கொடுமை, மரண தண்டனை

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கும் வகையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதானஅடக்குமுறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு கேபினட் அமைச்சா்கள் குழு ஒப்புதல் அளித்தது. இது தொடா்பாக நடைபெற்ற அமைச்சா்கள் கூட்டத்தில், அமைச்சா்கள் ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனா். அப்போது பாலியல் வன்கொடுமை வழக்குகளை குறிப்பிட்ட நேரத்தில் விரைந்து முடிக்கும்படி பிரதமா் ஷேக் ஹசீனா வலியுறுத்தியதாக அமைச்சரவை செயலா் அன்வருல் இஸ்லாம் தெரிவித்தாா்.

இது குறித்து அந்நாட்டின் சட்ட அமைச்சா் அனிஷுல் ஹுக் கூறுகையில், இந்த சட்ட மசோதாவுக்கு வங்க தேச அதிபா் அப்துல் ஹமித் செவ்வாய்க்கிழமை ஒப்பதல் அளிப்பாா். தற்போது கரோனா கால சூழ்நிலை காரணமாக நாடாளுமன்றம் கூட முடியாததால் அந்த மசோதா செவ்வாய்க்கிழமை சட்டமாகிவிடும். இந்த மசோதா கண்டிப்பாக பல்வேறு குற்றங்களை கட்டுப்படுத்த உதவும் என்றாா் அவா்.

Tags :
|