Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அவசர கதியில் பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க முயன்றதால் படகுகள் ஒன்றோடொன்று மோதல்

அவசர கதியில் பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க முயன்றதால் படகுகள் ஒன்றோடொன்று மோதல்

By: Monisha Wed, 09 Dec 2020 08:56:21 AM

அவசர கதியில் பாம்பன் தூக்குப்பாலத்தை கடக்க முயன்றதால் படகுகள் ஒன்றோடொன்று மோதல்

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக பலத்த காற்றின் வேகத்தால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடையாமல் இருப்பதற்காக ராமேசுவரத்தை சேர்ந்த 115 விசைப்படகுகளும், மண்டபத்தை சேர்ந்த 50 விசைப்படகுகளும் கடந்த டிசம்பர் 1-ந் தேதி பாம்பன் ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து, தென்கடலான குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. புயல் தாக்கம் முடிந்து இயல்பு நிலை திரும்பியதால் மீண்டும் மீன்பிடிக்க செல்ல வசதியாக பாம்பன் தூக்குப்பாலத்தை திறந்து படகுகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனால் பாம்பன் தூக்குப்பாலம் நேற்று மதியம் 12.00 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது குந்துகால் பகுதியில் நிறுத்தி இருந்த ராமேசுவரம், மண்டபத்தை சேர்ந்த 165 விசைப்படகுகள் ஒரே நேரத்தில் அணிவகுத்தபடி பாம்பன் பாலத்தை கடப்பதற்காக போட்டி போட்டு வந்தன. அப்போது குறிப்பிட்ட சில படகுகளில் மீனவர்கள் அவசர கதியில் தூக்குப்பாலத்தை கடக்க முயன்றதால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியும், தூக்குப்பாலத்தில் மோதியும் சென்றன.

fishermen,sea,suspension bridge,boats,collision ,மீனவர்கள்,கடல்,தூக்குப்பாலம்,படகுகள்,மோதல்

இவ்வாறு நான்கு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியதில் சேதமடைந்தன. அப்போது தூக்குப்பாலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே போலீசாரும் துறைமுக அதிகாரிகளும் மைக் மூலமாக மீனவர்களுக்கு படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக மெதுவாக வரவேண்டும் எனவும், அவசரமாக வரவேண்டாம் எனவும் அறிவிப்பு விடுத்தனர். இதைதொடர்ந்து மற்ற படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வந்தன.

தூக்குப்பாலத்தை கடந்து ராமேசுவரத்தை சேர்ந்த 115 படகுகள் துறைமுக கடல் பகுதியிலும் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 50 விசைப்படகுகள் மண்டபம் வடக்கு துறைமுக கடல் பகுதியிலும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோல் எட்டு நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து விசைப்படகு மீனவர்கள் இன்று காலை மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

அதேநேரம் மும்பையில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான இரண்டு புதிய ரோந்து கப்பல் ஒன்றன் பின் ஒன்றாக தூக்குப்பாலத்தை கடந்து சென்றன. மேலும் கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்வதற்காக சுற்றுலா பயணிகள் கப்பல் ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது. ஒரே நேரத்தில் ஏராளமான மீன்பிடி படகுகளும், கப்பலும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை, ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Tags :
|
|