Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் கேக் விற்பனை முன்பதிவு தொடங்கியது

இரு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் கேக் விற்பனை முன்பதிவு தொடங்கியது

By: Nagaraj Mon, 23 Nov 2020 09:49:53 AM

இரு மாதங்களுக்கு முன்பே கிறிஸ்துமஸ் கேக் விற்பனை முன்பதிவு தொடங்கியது

2 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது... சிங்கப்பூரில் கிறிஸ்துமஸ் கேக்குகளுக்கான விற்பனை முன்பதிவு இம்முறை இரு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.

கிருமிப்பரவல் கட்டுப்பாடுகளால், கடந்த ஆண்டுகளைப் போல் சிறப்புக் கிறிஸ்துமஸ் சந்தையில் இவ்வாண்டு பலகாரங்களை விற்க முடியாது. வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கக் கடைக்காரர்கள் புதிய வழிகளை நாடுகின்றனர்.

Amrita's Artisan Bakeology கடையை நடத்துபவர்கள் கிறிஸ்துமஸ் சிறப்புப் பாலாடை கேக்கிற்கு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டுக் குறைவான முன்பதிவுகளே கிடைத்திருப்பதாகக் தெரிவிக்கின்றனர். வழக்கமாக, சிறப்புச் சந்தைகளில் உள்ள இந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கேக்கைச் சுவைத்து முன்பதிவு செய்வர்.

singapore,cake,sales,booking,low quantity ,சிங்கப்பூர், கேக், விற்பனை, முன்பதிவு, குறைந்த அளவு

ஆனால், இந்த ஆண்டோ நிலைமை வேறு. அதனால், கடந்த ஆண்டை விட இம்முறை கிறிஸ்துமஸ் விற்பனை 25 விழுக்காடு சரியக்கூடும என்று தெரிவிக்கப்படுகிறது. இழப்பை ஈடுகட்ட, கிறிஸ்துமஸ் கேக்குகளை எப்படிச் செய்வது என்று கற்று தந்து கிடைக்கும் வருமானம் இழப்பின் விகிதத்தைக் குறைக்ககூடுமென இந்த கடையினர் நம்புகின்றனர்.

InterContinental Singapore ஹோட்டல் நிர்வாகக் குழு கிறிஸ்துமஸிற்காகவே பல புதிய உணவுகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் கடந்த மாதமே தொடங்கிவிட்டதாம். தனிநபர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் முன்பதிவுகள் குவிகின்றன. எனினும், அதிகமானோர் சின்ன கேக்குகளையும், குறைந்த அளவு பலகாரங்களையுமே இவ்வாண்டு நாடுவதாகக் கூறப்படுகிறது.

Tags :
|
|