Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்

By: Nagaraj Tue, 04 Aug 2020 5:04:24 PM

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட பிரகாசமாக ஒளிரும் இலங்கை, இந்தியாவின் புகைப்படம்

விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கையும், இந்தியாவும் பிரகாசமாக ஒளிரும் புகைப்படத்தை எடுத்து நாசா வெளியிட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து கடந்த ஜூலை 24 அன்று எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் அழகாக தென்படும் காட்சியொன்றை நாசா வெளியிட்டுள்ளது.

நாசா விண்வெளி வீரர்களான பொப் பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரண்டு மாதங்கள் கழித்த பின்னர் ஆகஸ்ட் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பூமியை வந்தடைந்தனர்.

nasa,photo,sri lanka,india,brightness ,நாசா, புகைப்படம், இலங்கை, இந்தியா, பிரகாசம்

ஆனால் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனம், ஏற்கனவே மற்றொரு குழுவினரை அடுத்த மாதம் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிட்டுள்ளன.

முதன்முதலில் மனிதர்களால் இயக்கப்பட்ட விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் நிறுவனத்தின் பயணத்தின் போது பெஹன்கென் மற்றும் டக் ஹர்லி ஆகியோரால் எடுக்கப்பட்ட சிறந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

அதில் ஜூலை 24 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படமொன்றில் இலங்கையும், இந்தியாவின் பிரகாசமான ஒளிரும் தெற்கு முனையும் காட்டப்பட்டுள்ளன. மிகவும் அழகாக தோன்றும் அந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது. விண்மீன்கள் நிறைந்த வானமும் வளிமண்டல பளபளப்பும் பூமியின் அடிவானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Tags :
|
|
|