Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் தொடர் போராட்டம்

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் தொடர் போராட்டம்

By: Karunakaran Mon, 14 Dec 2020 4:37:43 PM

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கர்நாடகாவில் பஸ் ஊழியர்கள் தொடர் போராட்டம்

கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. துணை முதல்மந்திரி லட்சுமண் சவதி முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியபின், போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் லட்சுமண் சவதி விகாச சவுதாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின் லட்சுமண் சவதி பேட்டி அளித்தபோது, போக்குவரத்து ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது, பணியின்போது கொரோனா தாக்கி மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்குவது உள்பட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அரசு ஊழியர்களாக்கும் கோரிக்கையை சாத்தியமில்லை என்று கூறிவிட்டோம் என்று கூறினார்.

bus workers stage,protests,karnataka,4th day ,பஸ் தொழிலாளர்கள் மேடை, போராட்டங்கள், கர்நாடகா, 4 வது நாள்

அரசு ஊழியராக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டதால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று 4-வது நாளாக கர்நாடகாவில் பஸ் போக்குவரத்து பாதிக்கபப்ட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் சுமார் 25 ஆயிரம் அரசு பஸ்கள் ஓடவில்லை. இதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பஸ்கள் அடங்கும். ஒரு சில பஸ்கள் மட்டுமே ஓடின. பஸ்களை இயக்கினால் கல்வீசி தாக்குவோம் என்று போராட்டம் நடத்தும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்ததால் குறைந்த அளவில் ஓடிய பஸ்களும் நிறுத்தப்பட்டன.

போக்குவரத்து ஊழியர்கள் பெங்களூரு சுதந்திர பூங்காவில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். பனசங்கரி பஸ் நிலையம் அருகேயும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பஸ் ஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.30 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஓடுகின்றன. அதில் பயணிக்கும் பயணிகளுக்கு பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

Tags :