Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 161 நாட்கள் தடைக்கு பின் சென்னை சாலைகளில் பேருந்துகள் இயங்கின

161 நாட்கள் தடைக்கு பின் சென்னை சாலைகளில் பேருந்துகள் இயங்கின

By: Nagaraj Tue, 01 Sept 2020 12:16:38 PM

161 நாட்கள் தடைக்கு பின் சென்னை சாலைகளில் பேருந்துகள் இயங்கின

161 நாட்களுக்கு பின் பேருந்துகள் இயக்கம்... சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் சென்னையில் மாநகரப் பேருந்துகள் ஓடத் துவங்கி உள்ளன

சென்னையில் மட்டும் 3300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் 20,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பேருந்தில் 24 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரு இருக்கைக்கு ஒருவர் மட்டுமே அமர வேண்டும். நின்று கொண்டு, படிகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai,bus,operation,terms,kanchipuram ,சென்னை, பேருந்து, இயக்கம், விதிமுறைகள், காஞ்சிபுரம்

சென்னையை பொருத்தவரை பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூர் வரையிலும் ஜிஎஸ்டி சாலையில் கூடுவாஞ்சேரி வரையிலும், கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் வரையிலும், பூந்தமல்லி சாலையில் திருமழிசை வரையிலும், செங்குன்றம் சாலையில் பாடி வரையிலும் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களுக்கு பேருந்து இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|