Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

By: Nagaraj Thu, 08 Oct 2020 09:15:37 AM

இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவால் நம் நாட்டில் சமீப காலமாக இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

agreement,internet security,japan,cabinet ,ஒப்பந்தம், இணைய பாதுகாப்பு, ஜப்பான், அமைச்சரவை

திறந்த நம்பகமான, நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் உறுதியாக உள்ளன. இதன் ஒரு கட்டமாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|