Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காவல்துறை அதிகாரிகள் சீருடைகளில் கேமராக்கள்; கனடா பிரதமர் ஜஸ்டின் யோசனை

காவல்துறை அதிகாரிகள் சீருடைகளில் கேமராக்கள்; கனடா பிரதமர் ஜஸ்டின் யோசனை

By: Nagaraj Tue, 09 June 2020 7:44:23 PM

காவல்துறை அதிகாரிகள் சீருடைகளில் கேமராக்கள்; கனடா பிரதமர் ஜஸ்டின் யோசனை

பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்கள் வைக்கும் யோசனையை தெரிவித்துள்ளார் பிரதமர் ஜஸ்டின்.

இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு தீர்வு காண பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ யோசனையொன்றை முன்வைத்துள்ளார். அதன்படி பொலிஸ் அதிகாரிகளின் சீருடைகளில் கெமராக்களை பொருத்த, மாகாண முதல்வர்களை வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

canada,prime minister,province,police,cameras ,கனடா, பிரதமர், மாகாணம், பொலிஸார், கெமராக்கள்

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடனான தொடர்புகளை கெமராக்கள் ஆவணப்படுத்துகின்றன. கனடாவில் பொலிஸார் இனமயமாக்கப்பட்ட மக்களை நியாயமற்ற முறையில் நடத்துகிறார்கள் என்ற புகார்களைத் தீர்ப்பதற்கான ஒப்பீட்டளவில் எளிய வழி அவை’ என கூறினார்.

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் மட்டுமல்ல கனடா, நியூஸிலாந்து, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த பின்னணியில் பிரதமர் ஜஸ்டின் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

Tags :
|
|