Advertisement

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

By: Monisha Thu, 03 Dec 2020 09:09:29 AM

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யலாமா?

மாதவிடாய் சமயத்தில் சில பெண்கள் அதிக வலியால் அவதிப்படுவர். பலருக்கு கடினமான வேலைகளை செய்யலாமா? உடற்பயிற்சி செய்யலாமா? என்று பல கேள்விகள் எழும்பும். இந்த நாள்களில் சத்துமிக்க உணவை சாப்பிடுவது மிகவும் நல்லது. மூளையிலிருந்து பிற உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருளான ஹார்மோன் மாற்றங்களால் மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வாக இருக்கும். இந்த பதிவில் மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யலாமா? என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் கூட அந்த மூன்று நாட்களில் உடற்பயிற்சியை நிறுத்தி வைகின்றனர். ஆனால் மாதவிடாய் காலக்கட்டத்தில் உடற்பயிற்சி செய்தல் தவறில்லை. மாதவிடாய் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதும், செய்யாததும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த சமயத்தில் பெண்கள் உடற்பயிற்சியை செய்வதன் மூலம் நம் மூளையில் உள்ள என்டோர்பின் ஹார்மோன் சுரக்கப்பட்டு ஒருவித மன அமைதியை தருவதுடன், மாதவிடாய் வலியையும் குறைக்கும். இதயத்திற்கான உடற்பயிற்சியை செய்வதன் மூலம் எண்டோர்பின் சுரக்கப்பட்டு ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

menstruation,women,health,exercise,agility ,மாதவிடாய்,பெண்கள்,ஆரோக்கியம்,உடற்பயிற்சி,சுறுசுறுப்பு

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதினால் ரத்தபோக்கில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஜாக்கிங், வாக்கிங், மெதுவாக படிக்கட்டு எறுதல் மற்றும் சைக்ளிங் போன்ற உடற்பயிற்சிகளை மாதவிடாய் காலத்தில் செய்வது மிகவும் நல்லது. 20 முதல் 40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யலாம்.

காலை வேளை தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் மாலையில் உடற்பயிற்சி செய்யலாம். இது உடலை பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மற்றும் மூட்டுகளுக்கு தொல்லையற்றதாகவும் மாற்றுகிறது.

இப்படிச் செய்வதால் நீங்கள் உடற்பயிற்சியின் அழுத்தத்தை உணராமல் இருப்பதோடு உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும். எனவே மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது மட்டுமின்றி உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். உடற்பயிற்சி செய்தால் மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும்.

Tags :
|
|