Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு

சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு

By: Nagaraj Tue, 28 July 2020 7:54:26 PM

சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் சூர்யாதேவி மீது வழக்குப்பதிவு

சூர்யா தேவி மீது வழக்குப்பதிவு... நடிகை வனிதா கொடுத்த புகாரின் அடைப்படையில் கைது செய்யப்பட்ட சூர்யாதேவிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் தலைமறைவாகி உள்ளதால் சுகாதாரத்துறை ஆய்வாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் தொற்றுநோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் செய்ததாக கூறி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வலைதளங்களில் பதிவு செய்த சூர்யா தேவி வடபழனி அனைத்து மகளிர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

suryadevi,virukambakkam,police,health inspector ,
சூர்யாதேவி, விருகம்பாக்கம், காவல்துறையினர், சுகாதார ஆய்வாளர்

இதனால் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அவரது இல்லத்திற்கு சுகாதாரத் துறையினர் சென்றபோது அவர் தலைமறைவாகி விட்டார். மேலும் அவர் எனக்கு கொரோனா தொற்று இல்லை என்று கடற்கரையில் சுற்றிக்கொண்டு செல்பி வீடியோ எடுத்து வெளியிட்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து சுகாதார ஆய்வாளர் ரமேஷ் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சூர்யா தேவி மீது பேரிடர் மேலாண்மை சட்டம், உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை அநேகமாக பரப்பக்கூடிய கவனக்குறைவான செயல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

முன்னதாக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறாக கருத்து பரப்பியதாக சூர்யாதேவி கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|