Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புயல் நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு சான்றிதழ்

புயல் நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு சான்றிதழ்

By: Nagaraj Wed, 17 June 2020 9:58:29 PM

புயல் நேரத்தில் கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு சான்றிதழ்

பெண் போலீசுக்கு பாராட்டு சான்றிதழ்... மஹாராஷ்டிராவில் ராய்காட் புயலின் போது கர்ப்பிணிக்கு உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. இங்கு கொரோனா பாதிப்பு ஒரு புறமும், நிசர்கா புயல் மற்றொரு புறமும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. மஹாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் வாஷி ஹவேலி பகுதியை சேர்ந்தவர் விநாயக். கூலிதொழிலாளி. இவரது மனைவி அனுசுயா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

pregnant,female police,certificate of appreciation,nisarga storm ,கர்ப்பிணி, பெண் போலீஸ், பாராட்டு சான்றிதழ், நிசர்கா புயல்



நிசார்கா புயல் கரையை கடக்கவிருந்த நிலையில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. அப்போது திடீரென அனுசுயாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. புயல் பாதிப்பு காரணமாக உதவிக்கு யாரும் இல்லை. நிலை தடுமாறி, செய்வதறியாது நின்ற போது, ஆர்த்தி என்னும் பெண் போலீசார் காரில் சென்ற போது விநாயக்கிடம் இதுகுறித்து விசாரித்தார். உடனே அவரது மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

தக்க சமயத்தில் அனுசுயாவை ஆஸ்பத்திரியில் சேர்த்ததால் அவருக்கு நலமுடன் குழந்தை பிறந்தது. நிசர்கா புயலில் அந்த கர்ப்பிணி பெண்ணின் வீடு சின்னாபின்னமாகியது குறிப்பிடத்தக்கது. இது பற்றி தகவல் அறிந்த ராய்காட் போலீஸ் சூப்பிரண்டு அனில் பராஸ்கர் மனிதாபிமான செயலில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஆர்த்தியை வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

Tags :