Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பற்றாக்குறையால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

பற்றாக்குறையால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

By: Nagaraj Sun, 29 Nov 2020 7:40:58 PM

பற்றாக்குறையால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

மருந்து ஏற்றுமதி நிறுத்தம்... பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு உள்நாட்டிலேயே பற்றாக்குறை ஏற்பட்டமையின் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மருந்து ஏற்றுமதியை கனடா மொத்தமாக நிறுத்தியுள்ளது.

அமெரிக்கர்களுக்கு கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில மருந்துக்கான விலைகளைக் குறைக்க அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முயற்சிக்கு பதிலளிக்கும் விதமாக கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

prime minister justin,drugs,prescription,export,requirements ,பிரதமர் ஜஸ்டின், மருந்துகள், பரிந்துரை, ஏற்றுமதி, தேவைகள்

கனேடிய சந்தைக்குள் இருக்கும் சில மருந்துகள் கனடாவுக்கு வெளியே நுகர்வுக்காக விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளன, அந்த விற்பனை, மருந்து பற்றாக்குறையை ஏற்படுத்தும் அல்லது மோசமாக்கும் என கனேடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனுடனான தனது முதல் விவாதத்தில் ட்ரம்ப் இந்த திட்டத்தை குறிப்பிட்டார். இருப்பினும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் மாதம் மற்ற நாடுகளுக்கு மருந்து பொருட்கள் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார், மேலும் கனேடியர்களின் தேவைகளைப் பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Tags :
|
|