Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன தனித்து நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என்கிறார் சானக வகும்பர

பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன தனித்து நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என்கிறார் சானக வகும்பர

By: Nagaraj Thu, 02 July 2020 6:33:37 PM

பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுன தனித்து நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் என்கிறார் சானக வகும்பர

தனித்து நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும்... வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் நாட்டு தலைவரை தெரிவு செய்ய முடியாது என்ற பாரம்பரிய கருத்தினை ஜனாதிபதி தேர்தலில் மாற்றியமைத்துள்ளோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் தனித்து நிலையான அரசாங்கத்தை நிச்சயம் ஸ்தாபிக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சானக வகும்பர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த 52.25 சதவீத மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டு உள்ளன.

stable,government,pa,united national party,general election ,நிலையான, அரசாங்கம், பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி, பொதுத் தேர்தல்

தேசிய பாதுகாப்பு உறுதிப்பாடு. சிறந்த அரசியல் நிர்வாகம் ஆகியவற்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். பாதாள குழுவினரது செயற்பாடுகள் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு சிறந்த கொள்கைத்திட்டத் தின் அடிப்படையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தவதற்கான ஆரம்பக்கட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு உள்ளன. ஆகவே நாட்டில் தற்போது சிறந்த அரச நிர்வாகம் நடைமுறையில் உ ள்ளது. இது பொதுத்தேர்தலை தொடர்ந்து மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சவால் விடுத்தன. இவர்களின் பாரம்பரிய கருத்தினை இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் ஊடாக முழுமையாக மாற்றியமைத்துள்ளோம். இந்நிலைமையே பொதுத்தேர்தலிலும் தொடரும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை செயற்படுத்தும் பலமான அரசாங்கம் தோற்றம் பெறும். இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்வார்கள். நிலையான அரசாங்கத்தை பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே ஸ்தாபிக்க முடியும் என்றார்.

Tags :
|
|