Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிவர் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு... 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

நிவர் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு... 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

By: Monisha Wed, 25 Nov 2020 08:23:51 AM

நிவர் தீவிர புயலாக கரையை கடக்க வாய்ப்பு... 145 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று மாலையில் தீவிர புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நிவர் புயல் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதுச்சேரிக்கு கிழக்கே தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டு இருக்கிறது. கடலூரில் இருந்து கிழக்கே தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. இது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

nivar cyclone,karaikal,mamallapuram,strong winds,severe storm ,நிவர் புயல்,காரைக்கால்,மாமல்லபுரம்,பலத்த காற்று,தீவிர புயல்

தீவிர புயலாக மாறும் நிவர் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் 25-ந்தேதி (இன்று) மாலையில் தீவிர புயலாகவே கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி வரை மழை தொடரும். அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்.

Tags :