Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வளிமண்டல சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு

By: Nagaraj Sat, 24 Oct 2020 7:17:47 PM

வளிமண்டல சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வரும் 28-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

salem,dharmapuri,krishnagiri,centimeter,report ,சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சென்டிமீட்டர், அறிக்கை

அதேபோல, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், திருத்தணி மற்றும் நாற்றாம்பள்ளியில் தலா 5 சென்டி மீட்டர் மழையும், திருபெரும்புதூர் மற்றும் பெனுகொண்டாபுரத்தில் தலா 4 சென்டி மீட்டர் மழையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|