Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Wed, 16 Dec 2020 08:17:34 AM

தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலையே பல இடங்களில் நிலவி வரும் நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும், நாளையும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு அதாவது இன்றும், நாளையும் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.

tamil nadu,rain,weather,coastal district,chennai ,தமிழ்நாடு,மழை,வானிலை,கடலோர மாவட்டம்,சென்னை

அந்தவகையில், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் தெரிவித்தார்.

Tags :
|