Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By: Monisha Thu, 29 Oct 2020 12:12:39 PM

அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

heavy rain,chennai,kanchipuram,tiruvallur,villupuram ,கனமழை,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம்

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாப்பூரில் 20 செ.மீ, மழையளவு பதிவாகியது. சென்னை டிஜிபி அலுவலகம் 18 செ.மீ, அண்ணா பல்கலை கழகம் - 14 செ.மீ., செங்குன்றம் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Tags :