Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

By: Monisha Wed, 21 Oct 2020 5:38:20 PM

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

வங்கக்கடலில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற்றமடைந்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

bay of bengal,depression,weather,rain ,வங்கக்கடல்,காற்றழுத்த தாழ்வு பகுதி,வானிலை,மழை

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags :