Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

By: Nagaraj Tue, 04 Aug 2020 7:43:02 PM

நீலகிரி, கோவையில் கன மழை பெய்ய வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு

கனமழை பெய்ய வாய்ப்பு... நீலகிரி மற்றும் கோவையில் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் மலைச்சரிவு மழைப்பொழிவு காரணமாக நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், கோவை மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கன மழையும் மற்றும் தேனி மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

coastal,low pressure,heavy rainfall,nilgiris ,கடலோரப்பகுதி, காற்றழுத்த தாழ்வு, கனமழை, நீலகிரி

திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில்.. மேல் பவானி 31, அவலாஞ்சி 22, கூடலூர் பஜார் 20, மேல் கூடலூர் 19, வால்பாறை, சோலையார் தலா 13, பெரியார் 12, சின்னக்கல்லார், சின்கோனா, எமரால்டு, பந்தலூர் தலா 11 செ.மீ மழையும் பெய்துள்ளது. மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு 11.30 மணி வரை கடல் அலை 3.1 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :