Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தென் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

By: Monisha Wed, 02 Dec 2020 2:25:04 PM

தென் தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் பாம்பனிலிருந்து 420 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 200கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது. மேலும் குமரியிலிருந்து 600கி.மீ. தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டுள்ளது.

இந்த புரெவி புயல் மணிக்கு 18கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. 18கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் கரையை கடக்கும்போது 100கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

southwest,storm,heavy rain,weather,warning ,தென்தமிழகம்,புயல்,கனமழை,வானிலை,எச்சரிக்கை

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|