Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; இங்கிலாந்து கொன்செர்வேட்டிவ் கட்சி பிரபு பாராட்டு

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; இங்கிலாந்து கொன்செர்வேட்டிவ் கட்சி பிரபு பாராட்டு

By: Nagaraj Sun, 09 Aug 2020 4:01:28 PM

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; இங்கிலாந்து கொன்செர்வேட்டிவ் கட்சி பிரபு பாராட்டு

கடலளவு மாற்றம்... நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் 2020 முடிவுகளானது இலங்கையில் இதுவரை ஏற்பட்டிருக்காத கடலளவு மாற்றம் என பிரித்தானியாவின் கொன்செர்வேட்டிவ் கட்சியின் பிரபு லோர்ட் நெஸிபி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் ஆதாரவாளர்களில் ஒருவரான நெஸிபி, குறித்த மாற்றத்தினை அங்கீகரிக்கும் நபர்களில் ஒருவராக தான் இருக்கும் அதேவேளை பிரித்தானிய அரசாங்கம் மற்றும், பிரித்தானியாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் வாழும் புலம்பெயர் சமூகங்களும் இதனை அங்கீகரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

sri lanka,new dawn,opportunity,thought,young leader ,இலங்கை, புதிய விடியல், வாய்ப்பு, சிந்தனை, இளம் தலைவர்

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இது உண்மையிலேயே சுட்டிக்காட்டத்தக்க தேர்தல் முடிவு. உலகில் வேறெங்கும் காண முடியாத அளவில் இலங்கையின் சாதாரண பிரஜைகள் மீண்டும் வாக்களித்துள்ளனர். இதுவே உண்மையான செயற்படக்கூடிய ஜனநாயகம். இந்த முடிவுகளானது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன வரலாற்றில் இணைக்கப்பட்டமையினை புலப்படுத்துவதுடன் குறித்த இடங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆளும் கட்சியாகவும் சஜித் பிரேமதாச எனும் இளம் தலைவரை கொண்ட சிறிய எதிர்க் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தியையும் அமர்த்தியிருக்கிறது.

இது இலங்கைக்கான புதிய விடியல். இந்த வாய்ப்பானது இலங்கையை ஒன்றிணைக்கக் கூடிய ஓர் யுகத்தினை உருவாக்குவதுடன் தனித் தமிழீழம் எனும் பிரிவினைவாதச் சிந்தனையை முற்றாக ஒழிக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :