Advertisement

சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

By: Monisha Sat, 28 Nov 2020 08:55:18 AM

சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விரிவான விபரம் வருமாறு:-

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2021-ம் ஜனவரி 1-ம் தேதியும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12 முதல் 15-ம் தேதி வரையிலும், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26-ம் தேதியும், புனித வெள்ளியை முன்னிட்டு ஏப்ரல் 2-ம் தேதியும், தெலுங்கு புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு ஏப்ரல் 12 முதல் 14-ம் தேதி வரையிலும், ரம்ஜானை முன்னிட்டு மே 14-ம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 21-ம் தேதியும், மொகரத்தை முன்னிட்டு ஆகஸ்டு 20-ம் தேதியும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆகஸ்டு 30-ம் தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

chennai,high court,holiday,festive,new year ,சென்னை,ஐகோர்ட்டு,விடுமுறை,பண்டிகை,புத்தாண்டு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10-ம் தேதியும், ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதியும், மிலாது நபியை முன்னிட்டு அக்டோபர் 19-ம் தேதியும், தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ம் தேதி வரையிலும் விடுமுறை விடப்படுகிறது.

இதுதவிர உழவர் திருநாள், மகாவீர் ஜெயந்தி, தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, கிறிஸ்துமஸ் ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. மே 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கோடை விடுமுறையும், அக்டோபர் 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தசரா பண்டிகை விடுமுறையும், டிசம்பர் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையும் விடப்படுகிறது.

Tags :