Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை ஐ.ஐ.டி. யில் 183 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

சென்னை ஐ.ஐ.டி. யில் 183 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

By: Monisha Tue, 15 Dec 2020 3:32:29 PM

சென்னை ஐ.ஐ.டி. யில் 183 பேருக்கு கொரோனா தொற்று; பரிசோதனை தீவிரம்

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 7-ம் தேதி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரிகளுக்கு நேரில் சென்றும், விடுதியில் தங்கியும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டி. யில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு நேற்று முன்தினம் கொரோனா அறிகுறி இருந்ததால் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 71 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 66 மாணவர்களும், 5 ஊழியர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 33 பேருக்கு தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவரும் கிண்டியில் உள்ள கிங் அரசு கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று வரை 104 பேர் ஐ.ஐ.டி. யில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

iit,corona,infection,test,treatment ,ஐஐடி,கொரோனா,தொற்று,பரிசோதனை,சிகிச்சை

இந்நிலையில் சுகாதாரத்துறையின் அதிரடி நடவடிக்கையால் விடுதியில் தங்கியிருந்த அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று 539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான்வர்கீஸ், ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மாணவர்கள் தங்கி இருந்த விடுதி, உணவு அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் கொரோனா பாதுகாப்பு உடையுடன் கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிடும் கூடத்தில் மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடியதன் மூலம் நோய் தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. நேற்று ஒரேநாளில் 539 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று எடுக்கப்பட்ட இந்த சோதனையில் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரையில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஐ.டி. விடுதி கேண்டீன் தொழிலாளி மூலம் தொற்று பரவி உள்ளது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags :
|
|
|