Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பனி மூட்டம் காரணமாக சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்

பனி மூட்டம் காரணமாக சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்

By: Monisha Tue, 22 Dec 2020 4:18:57 PM

பனி மூட்டம் காரணமாக சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்

சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு தினமும் காலை நேரத்தில் ட்ரூஜெட் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் காலை 8.15 மணிக்கு வந்து சேருகிறது.

பின்னர் சேலத்திலிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு காலை 9.35 மணிக்கு சென்றடைகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வானில் நிலவும் கடும் பனி மூட்டத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னை-சேலம் விமான இயக்க சேவையில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

haze,air service,flight,delay,time ,பனி மூட்டம்,விமான சேவை,விமானம்,தாமதம்,நேரம்

குறிப்பாக சென்னையிலிருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் தாமதமாக புறப்பட்டு வந்தது. இதனால் இன்று முதல் வருகிற 31-ம் தேதி வரை சேலம்-சென்னை விமான சேவை இயக்க நேரத்தில் மாற்றம் செய்வதாக ட்ரூஜெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை-சேலம் விமானம் இன்று முதல் சென்னையிலிருந்து காலை 8.45 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு 9.45 மணிக்கு வந்து சேரும். இதேபோல் மறுமார்க்கத்தில் சேலத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு 11.05 மணிக்கு சென்றடைகிறது. இந்த தகவலை சேலம் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
|
|
|