Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

By: Karunakaran Fri, 28 Aug 2020 2:23:44 PM

நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு நிலச்சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து அமல்படுத்தி உள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சட்ட திருத்தத்திற்கு காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தற்போது இந்த நிலச்சீர்திருத்த சட்ட திருத்தத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அரசு, நிலச்சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி, அந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த சட்டசபையில் எந்த விதமான விவாதமும் நடத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் ஒரு தலைபட்சமாக முடிவு எடுத்து அந்த சட்ட திருத்தத்தை அரசு அமல்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

chidramaiah,modi,ban,land reform legislation ,சித்ராமையா, மோடி, தடை, நில சீர்திருத்த சட்டம்

இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகிவிட்டதாகவும், விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து ரியல்எஸ்டேட், பிற தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளை கூலி வேலைக்கு செல்ல வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

,மேலும் அவர், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து விவசாயிகளிடம் எந்த விதமான கருத்துகளையும் அரசு கேட்கவில்லை. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் வகையில், கர்நாடக அரசு அமல்படுத்தி உள்ள இந்த சட்ட திருத்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். அந்த சட்ட திருத்தத்திற்கு பிரதமர் தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
|
|