Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தூத்துக்குடி மாவட்டத்தில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

By: Monisha Wed, 11 Nov 2020 10:43:19 AM

தூத்துக்குடி மாவட்டத்தில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!

கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். மாவட்டத்தில் ரூ.328.66 கோடி மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் முக்கிய பிரமுகர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

29 புதிய திட்டப்பணிகள் குறித்த விபரம் வருமாறு:- தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் ரூ.16 கோடி மதிப்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை கருவியை இயக்கி தொடங்கி வைத்தார். அங்கு ரூ.71 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பிலான ஆய்வக கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

corona prevention work,development project work,thoothukudi,edappadi palanisamy ,கொரோனா தடுப்பு பணி,வளர்ச்சி திட்ட பணி,தூத்துக்குடி,எடப்பாடி பழனிசாமி

இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), பள்ளி கல்வித்துறை, போலீஸ் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.22 கோடியே 37 லட்சம் மதிப்பிலான 16 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பள்ளி கல்வித்துறை, வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, தோட்டக்கலைத்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.328 கோடியே 66 லட்சம் மதிப்பிலான 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Tags :