Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் விவசாயத்தை மேம்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை

தெலுங்கானாவில் விவசாயத்தை மேம்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை

By: Nagaraj Fri, 05 June 2020 12:36:51 PM

தெலுங்கானாவில் விவசாயத்தை மேம்படுத்த முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை

முதல்வர் ஆலோசனை கூட்டம்... தெலுங்கானாவில் விவசாயத்தை மேம்படுத்துவது தொடர்பாகவும், வேளாண்மையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும் முதல்வர் சந்திரசேகர ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தெலுங்கானாவில் மாநில அரசின் சிறந்த நடவடிக்கைகளாலும், சிறந்த இயற்கை வளங்களை கொண்டதாலும் தெலுங்கானா விவசாய மாநிலமாக மாறி வருகிறது. மாநிலத்தில் வேளாண்மையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக பிரகதிபவனில் வேளாண் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்கள் ஆகியோருடன் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார்.

agriculture,advice,chief minister,advice,crops ,
வேளாண், ஆலோசனை, முதல்வர், ஆலோசனை, பயிர்கள்

மாநிலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட பயிர்களை சாகுபடி செய்வதற்கும் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தினார்.இது தொடர்பாக முதல்வர் கூறுகையில், மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்தவும் , விவசாயிகளின் வாழ்வை செழிப்பாக்கவும் டிஆர்எஸ் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.

இதனால் எண்ணற்ற விவசாயிகள் பலனடைந்து வருகின்றனர். விவசாயத்தை லாபகரமாக நோக்கில் செலுத்துவது மட்டுமின்றி சத்தான, சீரான மற்றும்ஆரோக்கியமான உணவுகளை உபயோகிக்குமாறு மக்களை ஊக்குவிக்க வேண்டும். சந்தையின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தையில் அதிகமாக பயன்படுத்தப்படும் / தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்யவும் விவசாயிகளுக்கு தகுந்த அறிவுரைகளை அதிகாரிகள் வழங்க வேண்டும்.

விவசாய பொருட்கள் சந்தைபடுத்துதல் குழு மற்றும் வேளாண் ஆராய்ச்சி குழுவை அரசு நியமிக்கும். பருத்தி உற்பத்தியாளர்களை ஆதரிப்பதற்காக அரசாங்கம் ஒரு பருத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் நிறுவும்.

agriculture,advice,chief minister,advice,crops ,
வேளாண், ஆலோசனை, முதல்வர், ஆலோசனை, பயிர்கள்

மாறி வரும் காலநிலைக்கு ஏற்ப தோட்டகலைத் துறையை சீரமைக்கவும், பயிர்கள் குறித்த தரவுகளை தொகுத்து புள்ளி விபர பிரிவை உருவாக்கவும் முயன்று வருகிறோம்.

இந்த துறையில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்தல் குழு, உலகளாவிய வேளாண் பொருட்களுக்கான தேவை, சந்தைப்படுத்தல், விலை நிர்ணயம் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும், மேலும் பயிர் சாகுபடி முறையை பரிந்துரைக்கும்.குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் விவசாயிகள் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண் ஆராய்ச்சி குழு, பயிர் விளைச்சலை மேம்படுத்த சாகுபடி முறைகளை ஆய்வு செய்து பரிந்துரைக்கும். "விவசாயத் துறையில் விளைச்சலை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சாகுபடி முறைகளில் பல மாற்றங்கள் உள்ளன. உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு ஒரு விஞ்ஞான அடிப்படை இருக்க வேண்டும். வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகளுக்கு செல்ல மக்களை ஊக்குவிக்க வேண்டும், இதை மனதில் வைத்து பயிர்களை பயிரிட வேண்டும். இது நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான மேம்பட்ட நோயெதிர்ப்பு மண்டலத்தை விளைவிக்கும், இது இறுதியில் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும். இவ்வாறு கூறினார்.

Tags :
|
|