Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

By: Nagaraj Tue, 22 Sept 2020 12:57:14 PM

கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய சீனா

'ஹையாங் 2 சி' என்ற செயற்கைக்கோளை 'லாங் மார்ச் 4 பி' என்ற ராக்கெட் மூலம் வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.

சீனா அருகில் உள்ள அனைத்து நாடுகளுடன் பகைமையை பாராட்டி வரும் நிலையில் தற்போது உலக நாடுகள் சீனாவுக்கு எதிரக ஓரணியில் திரள ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் சீனா இந்த சம்பவத்திலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணம் ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து, சீனா தனது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

satellite,sky,china,administration,information ,செயற்கை கோள், விண்ணில், சீனா, நிர்வாகம், தகவல்

'ஹையாங் 2 சி' என்ற அந்த செயற்கைக்கோள் 'லாங் மார்ச் 4 பி' என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது சீனா விண்ணுக்கு அனுப்பிய 3-வது கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த புதிய செயற்கைக் கோள் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா தனது கப்பல் ஏவுதளத்திலிருந்து ஒரே ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|