Advertisement

கனேடியருக்கு மரண தண்டனை விதித்தது சீனா நீதிமன்றம்

By: Nagaraj Fri, 07 Aug 2020 6:29:51 PM

கனேடியருக்கு மரண தண்டனை விதித்தது சீனா நீதிமன்றம்

சீனாவில் கனேடியருக்கு மரண தண்டனை... போதைப்பொருள் கடத்தல் மற்றும் உற்பத்தி செய்ததற்காக கனேடியருக்கு மரண தண்டனை விதித்ததாக சீன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹூவாவி நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ஸோவை (Meng Wanzhou) கனடா-வன்கூவர் பொலிஸார், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் திகதி கைது செய்தமைக்கு பிறகு பதிவான நான்காவது மரண தண்டனை உத்தரவாகவும், போதைப்பொருள் விவகாரத்தில் இரண்டு நாட்களுக்குள் இரண்டாவது கனேடியருக்கு மரண தண்டனை சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.

சீனாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் கடுமையாக மோசமடைந்து வருகின்ற நிலையில், சீன நிதிமன்றத்தின் இந்த உத்தரவு மேலும் உறவில் விரிசலை அதிகரித்துள்ளது.

கனேடிய நாட்டைச் சேர்ந்த யே ஜியான்ஹூய்க்கு, தெற்கு நகரமான ஃபோஷனில் நடந்த வழக்கு விசாரணையின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஃபோஷன் இடைநிலை மக்கள் நீதிமன்றம் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.

charge,execution,drug,death penalty ,
குற்றச்சாட்டு, மரண தண்டனை, போதைப்பொருள், மரண தண்டனை

யே மற்றும் ஐந்து ஆண்கள் பயன்படுத்திய அறையில் இருந்து, எம்டிஎம்ஏ கொண்ட 218 கிலோகிராம் (481 பவுண்டுகள்) வெள்ளை படிகங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர். பொதுவாக எக்ஸ்டஸி என இது அழைக்கப்படுகிறது.

மற்ற ஐந்து பேரும் சீன நாட்டினவர்கள். இதில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்ற அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய சூ வீஹோங்கிற்கு போதைப்பொருள் தயாரித்ததற்காக மற்றொரு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்த ஒரு நாள் கழித்து யே மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது.

சீனா கடந்த ஆண்டு கனேடியர்கள் ராபர்ட் லாயிட் ஷெல்லன்பெர்க் மற்றும் ஃபேன் வீ ஆகியோருக்கு தனி வழக்குகளில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்தது. இரண்டு பேரும் மேன்முறையீடு செய்துள்ளனர்.

Tags :
|
|