Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் - பிரதமர் மோடி

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் - பிரதமர் மோடி

By: Karunakaran Sun, 22 Nov 2020 6:08:30 PM

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்களுக்கு தூய்மையான குடிநீர் - பிரதமர் மோடி

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் குடிநீர் வினியோக திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடந்தது. இந்த விழாவினை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியே இன்று தொடங்கி வைத்து உள்ளார். அதன்படி இரு மாவட்டங்களின் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது, நாடு விடுதலை அடைந்த பின்பு பல தசாப்தங்களாக கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பகுதி ஒன்று உண்டெனில், அது இந்த பகுதியே ஆகும். அதிகளவு வளங்களை கொண்ட பகுதியாக இருந்தபோதிலும், விந்தியாசலம் மற்றும் பண்டல்காண்ட் பகுதிகள் பற்றாக்குறை வசதிகளை கொண்ட பகுதியாகவே இருந்து வந்துள்ளன என்று தெரிவித்தார்.

clean drinking wate,jal jeevan scheme,pm modi,india ,சுத்தமான குடிநீர், ஜல் ஜீவன் திட்டம், பிரதமர் மோடி, இந்தியா

மேலும் அவர், இந்த பகுதியில் பல்வேறு ஆறுகள் ஓடியபோதிலும், வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவே அறியப்பட்டு வந்துள்ளன. இதனால் இந்த பகுதியில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள் என்று கூறினார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஓராண்டில் 2.6 கோடி குடும்பங்கள் குழாய் வழியாக தூய்மையான குடிநீர் பெற்றுள்ளனர். இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் அதை மேலும் விரைவுபடுத்தும் என்று பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசினார்.

Tags :