Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

By: Monisha Sat, 12 Sept 2020 3:35:42 PM

நீட் தேர்வு அச்சத்தால் மதுரை மாணவி தற்கொலை; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று முதலவர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல்படை வளாகத்திலுள்ள காவல் குடியிருப்பில் ஆறாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா இன்று தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

neet examination,madurai student,suicide,edappadi palanisamy,condolence ,நீட் தேர்வு,மதுரை மாணவி,தற்கொலை,எடப்பாடி பழனிசாமி,இரங்கல்

இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த செல்வி.ஜோதிஸ்ரீ துர்கா அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags :