Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைமை செயலக கோட்டையில் 15ந்தேதி காலை 8.45க்கு முதல்வர் தேசியக்கொடி ஏற்றுகிறார்!

தலைமை செயலக கோட்டையில் 15ந்தேதி காலை 8.45க்கு முதல்வர் தேசியக்கொடி ஏற்றுகிறார்!

By: Monisha Thu, 13 Aug 2020 10:41:40 AM

தலைமை செயலக கோட்டையில் 15ந்தேதி காலை 8.45க்கு முதல்வர் தேசியக்கொடி ஏற்றுகிறார்!

நாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். மாநில தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் கொடி ஏற்றுகிறார்கள். சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

* தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் 15ந்தேதி காலை 8.45க்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

independence day,flag hoisting,tamil nadu,edappadi palanisamy,speech ,சுதந்திர தினம்,கொடியேற்றம்,தமிழ்நாடு,எடப்பாடி பழனிசாமி,உரை

* வீடுகளுக்கே சென்று தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி ஆட்சியர் மரியாதை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* விடுதிகளுக்கு நேரில் சென்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இனிப்பு பெட்டகம் தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

* கொரோனா பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் சிறப்பிக்கிறார்.

* சுதந்திர தின நிகழ்ச்சிகளை டிவி, வானொலியில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* சுதந்திர தின விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் நேரில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :