Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு

By: Monisha Mon, 03 Aug 2020 12:50:16 PM

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு

கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 6-ம் தேதி முதல் 4 மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

tamil nadu,corona virus,immunization,madurai,dindigul ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,நோய் தடுப்பு பணிகள்,மதுரை,திண்டுக்கல்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரை, திண்டுக்கல், தென்காசி, நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் நேரில் ஆய்வு செய்கிறார்.

அப்போது அவர் கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மேற்கொள்ள வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

Tags :