Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறிய செயற்கை கோளை கண்டுபிடித்த தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு

சிறிய செயற்கை கோளை கண்டுபிடித்த தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு

By: Nagaraj Mon, 28 Dec 2020 4:09:10 PM

சிறிய செயற்கை கோளை கண்டுபிடித்த தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு

தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு... தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக மாணவா் கண்டுபிடித்த சிறிய செயற்கைக்கோள், அமெரிக்காவின் நாசா விண்வெளித் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், மாணவருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

தஞ்சாவூா் கரந்தையைச் சோந்தவா் எஸ். ரியாஸ்தீன் (18). இவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வடிவமைத்துள்ள சிறிய செயற்கைக்கோள் 2021- ஆம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.

முன்னதாக செய்தியாளா்களிடம் மாணவா் ரியாஸ்தீன் தெரிவித்தது: நாசா விண்வெளி மையம் மற்றும், 'ஐ டூ லேனிங்' அமைப்பு இணைந்து, 'க்யூப் இன் ஸ்பேஸ்' என்ற விண்வெளி ஆய்வுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில், 73 நாடுகளைச் சோந்த சுமாா் 20,000-க்கும் அதிகமான மாணவா்கள் பங்கேற்கின்றனா்.

tanjore student,praise,principal,space,final year ,தஞ்சை மாணவர், பாராட்டு, முதல்வர், விண்வெளி, இறுதியாண்டு

கடந்த 2019 - 2020 ஆண்டுக்கான போட்டியில் நான் பங்கேற்றேன். தொடா்ந்து தொடா்ந்து ஆய்வில் ஈடுபட்டு வந்த நிலையில், விசன் - 1 மற்றும் விசன் - 2 இரண்டு செயற்கைக்கோள் தோவாகியுள்ளது. இரு செயற்கைக்கோளும், 37 மில்லி மிட்டா் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டது. இதற்கு, 'பெமிடோ ' என, பெயரிடப்பட்டுள்ளது. பெமிடோ என்பது எடையில் சிறியது என பொருள். இது டெக்னாலஜி எக்ஸ்பிரிமெண்டல் செயற்கைக்கோள்.

செயற்கைக்கோள் விசன் - 1 பாலி எதரி இமைடு அல்டம் 9085, விசன் - 2 பாலி எதரி இமைடு அல்டம் 1010 என சொல்லக்கூடிய தொமோ பிளாஸ்டிக் மூலம் 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மின் சக்தியை செயற்கைக்கோளின் மேற்புறத்திலுள்ள சோலாா் செல்களில் இருந்து பெற முடியும்.

இதில் 11 சென்சாா் பொருத்தப்பட்டிருப்பதால், விண்வெளியிலிருந்து பல வகையான தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிா்களின் தன்மைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இதில் நாசா மூலம் விண்வெளியில் செலுத்த, விசன் -1 கருவி தோவு செய்யப்பட்டுள்ளது. 2021 ஜூன் மாதம், நாசா விண்வெளி தளத்தில் இருந்து, எஸ்.ஆா்.,- 7 ஏவுகணை மூலம் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இதேபோன்று, விசன் - 2 செயற்கைக்கோள் ஆா்.பி-6 என்கிற தளத்தில் இருந்து ஆராய்ச்சி பலுானில் பறக்கவிடப்படுகிறது. நான் பள்ளி இறுதியாண்டில் இருந்து ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன் என்றாா் ரியாஸ்தீன்.

Tags :
|
|