Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

By: Monisha Mon, 28 Dec 2020 4:47:08 PM

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி தொடரும்- அமைச்சர் ஜெயக்குமார்

கடந்த சில தினங்களாக அ.தி.மு.க. கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பா.ஜ.க. இதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க. தலைமை அறிவிக்கும் என்று கூறுவது அ.தி.மு.க. வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

aiadmk,coalition,candidate,debate,politics ,அதிமுக,கூட்டணி,வேட்பாளர்,விவாதம்,அரசியல்

அதில் அவர் கூறும்போது, அ.தி.மு.க. வின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி அறிவிப்பே இறுதியானது’ என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Tags :
|
|