Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரெயில்கள் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரெயில்கள் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து

By: Monisha Thu, 19 Nov 2020 12:14:37 PM

கோவை-சென்னை சதாப்தி சிறப்பு ரெயில்கள் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து

கோவை-சென்னை, சென்னை- கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ரெயில்களின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதனையடுத்து, தளர்வுக்கு பின்னர் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதில் கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் என 5 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டது.

இதில் கோவையில் இருந்து சென்னை மற்றும் மயிலாடுதுறைக்கு செப்டம்பர் 7-ந்தேதி முதல் சதாப்தி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் கோவை-சென்னை வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற தினங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.

coimbatore,chennai,sadhapati special rail,railway,cancellation ,கோவை,சென்னை,சதாப்தி சிறப்பு ரெயில்,ரெயில்வே,ரத்து

இந்நிலையில் பயணிகளிடையே போதிய வரவேற்பு இல்லாததால் ரெயில் குறைந்த பயணிகளுடனே இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பயணிகளின் வருகை குறைவையொட்டி கோவை-சென்னை, சென்னை- கோவை இடையே இயக்கப்பட்டு வரும் சதாப்தி சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியுள்ளதாவது:- கோவை சென்னை (ரெயில் எண்: 06027), சென்னை கோவை (ரெயில் எண்: 06028) ஆகிய 2 சதாப்தி சிறப்பு ரெயில்களில் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால் டிசம்பர் 2-ந்தேதி முதல் ரத்து செய்யப்படுகின்றன. நவம்பர் 30-ந் தேதி வரை மட்டுமே இந்த சிறப்பு ரெயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :