Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா தொற்று பரவும் அபாயம்: கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு சீல்

கொரோனா தொற்று பரவும் அபாயம்: கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு சீல்

By: Monisha Sat, 27 June 2020 11:04:16 AM

கொரோனா தொற்று பரவும் அபாயம்: கோவை எம்.ஜி.ஆர். மொத்த மார்க்கெட்டுக்கு சீல்

வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகள் கோவை எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மார்க்கெட் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் செயல்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட் போன்று கோவையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 150-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடை அமைத்து உள்ளனர்.

கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட் தான் கேரள மாநிலத்தின் பெரும்பாலான காய்கறி தேவையை பூர்த்தி செய்கிறது. கொரோனா பரவலை தொடர்ந்து இட நெருக்கடி காரணமாக எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 112 கடைகளும், அதற்கு எதிரில் உள்ள பஸ் நிலையத்தில் 35 கடைகளும் செயல்பட்டன. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

coronavirus,coimbatore,mgr market,vegetable ,கொரோனா வைரஸ்,கோவை,எம்ஜிஆர் மார்க்கெட்,காய்கறி

எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து நேற்று மதியம் கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். மார்க்கெட்டில் ஏற்கனவே 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொது மக்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர். காய்கறி மொத்த மார்க்கெட் கேட்டை மாநகராட்சி பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

அதன்பின்னர் மார்க்கெட்டின் முன்பகுதி முழுவதும் இரும்பு தகடுகளை கொண்டு அடைத்தனர். முன்னதாக மார்க்கெட்டில் இருப்பு வைத்திருந்த காய்கறி மூட்டைகளை வியாபாரிகள் லாரியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றனர். மேலும் மார்க்கெட் அருகில் இருந்த தனியார் வாகன நிறுத்துமிடமும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

Tags :