Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவை-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கம்

கோவை-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கம்

By: Monisha Wed, 02 Dec 2020 12:13:46 PM

கோவை-நாகர்கோவில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் இயக்கம்

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, சென்னை மற்றும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு பகுதிக்கு ரெயில்கள் இயக்கப்படாததால் தீபாவளி பண்டிகை மற்றும் மருத்துவ தேவைக்காக பொதுமக்கள் ரெயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் கோவை- நாகர்கோவில் இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுவதற்கான அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

coimbatore,nagercoil,superfast,special rail,railway ,கோவை,நாகர்கோவில்,சூப்பர்பாஸ்ட்,சிறப்பு ரெயில்,ரெயில்வே

கோவை-நாகர்கோவில் இடையே (02668) சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வருகிற 8-ந் தேதி முதல் தினமும் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் கோவையில் இருந்து தினமும் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5.05 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். இதேபோல் நாகர்கோவில்-கோவை (02267) இடையே இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நாகர்கோவிலில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு கோவையை வந்தடைகிறது.

கோவையில் இருந்து புறப்பட்டு இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக நாகர்கோவிலை சென்றடைகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :