Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்

By: Karunakaran Fri, 28 Aug 2020 1:42:18 PM

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை - சுப்ரீம் கோர்ட்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகளவில் கொரோனா அதிகமாக பரவும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

college,ban,final semester exam,supreme court ,கல்லூரி, தடை, இறுதி செமஸ்டர் தேர்வு, உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, பல்கலைக்கழக மானியக்குழு அறிவிக்கைக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

மேலும், தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags :
|