Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து; முதல்வர் தகவல்

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து; முதல்வர் தகவல்

By: Nagaraj Thu, 27 Aug 2020 8:21:03 PM

கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து; முதல்வர் தகவல்

விரைவில் தொடங்கப்படும்... கடலூர் துறைமுகத்தில் விரைவில் வணிக கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு இன்று வந்திருந்தார்.

அங்கு வளாகத்தில் அமைக்கப்பட்ட மேடையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து ரூ.32.17 கோடியில் 22 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் ரூ.25.54 கோடியில் முடிவுற்ற 33 பணிகளை திறந்து வைத்தார்.

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல் தளத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தடுப்புப் பணிகள், மாவட்ட வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர், மாவட்டத்திலுள்ள விவசாய சங்கப் பிரதிநிதிகள், சிறு-குறு வா்த்தகா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் கலந்தாய்வு நடத்தினார்.

cuddalore,port,merchant shipping,transport ,கடலூர், துறைமுகம், வணிக கப்பல், போக்குவரத்து

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு பாராட்டுயும், நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: "இந்தியாவிலேயே அதிகயளவு கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதமும் அதிகம். கட​லூர் மாவட்டத்தில் அதிக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலம் நோய்த்தொற்று உடனடியாக கண்றியப்படுகிறது. மேலும் கடலூர் துறைமுகத்தில் வணிக கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|