Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி

By: Monisha Thu, 19 Nov 2020 11:27:38 AM

மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி

2020-21-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது.

அரசு கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 32 எம்.பி.பி.எஸ். இடங்களில் 227 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 1,147 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 86 இடங்களும் என 313 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 165 பல் மருத்துவ இடங்களில் (பி.டி.எஸ்.) 12 இடங்களும், சுயநிதி பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 1,065 பல் மருத்துவ இடங்களில் 80 இடங்களும் என 92 பி.டி.எஸ். இடங்களும் ஆக மொத்தம் 405 இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

medical consultation,students,college,corona examination,positive ,மருத்துவ கலந்தாய்வு,மாணவர்கள்,கல்லூரி,கொரோனா பரிசோதனை,பாசிட்டிவ்

முதல் நாளான நேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அடிப்படையில் அறிவிக்கப்பட்ட தரவரிசையின் படி 267 மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டு இருந்தனர். மேலும் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags :