Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாரம்பரிய களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

பாரம்பரிய களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

By: Monisha Sat, 26 Dec 2020 10:51:07 AM

பாரம்பரிய களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

கேலோ இந்தியா விளையாட்டு திட்டத்தின் மூலம் பாரதத்தின் பாரம்பரிய கலையான களரிப்பயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

களரிப்பயட்டு - ரத்தத்தை துள்ளச்செய்யும் மண்சார்ந்த விளையாட்டு. இதற்கு உலகில் சரியான இடம் கிடைக்கவேண்டும். இவ்விளையாட்டிற்கு அதிக உடல்திறனும் மன ஒழுக்கமும் தேவை. இதை தேசிய விளையாட்டு போட்டிகளில் சேர்த்திருப்பது, கிராம மக்கள் பங்கேற்க அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுக்கும். வாழ்த்துகள். என அவர் கூறியுள்ளார்.

tradition,sports,kalaripayattu,greetings,encouragement ,பாரம்பரியம்,விளையாட்டு,களரிப்பயட்டு,வாழ்த்து,ஊக்கம்

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேலோ இந்தியா திட்டத்தின் மூலம் கட்கா, களரி, தங்-டா, மல்லர் கம்பம் ஆகிய நான்கு விளையாட்டுகள் தேசிய விளையாட்டு போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ‘யோகாசனா’ அறிமுக விளையாட்டாகவும் இடம்பெற உள்ளது. இப்போட்டிகள் அடுத்தாண்டு அரியானாவில் நடத்தப்படும் எனவும் கேலோ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

‘ஈஷா கிராமோத்ஸவம்’ என்ற பெயரில் தமிழக கிராமங்களில் இளைஞர்கள் மற்றும் பெண்களிடம் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்து வரும் ஈஷாவுக்கு மத்திய விளையாட்டு துறை அமைச்சகம், ‘கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ விருதை வழங்கி கெளரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|